மத்திய அரசின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறவிடப்பட்ட மொத்த மற்றும் சில்லறை வியாபாரங்களின் கீழேயான  புரள்வு வரி மற்றும்  நிலையான சொத்துக்களைக் கையளிப்பதன் கீழ் முத்திரை வரியினை அறவிடும் அதிகாரம்  இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசின் 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் 9 ஆவது   அட்டவணைக்கு இணங்க   மாகாண சபைக்கு கையளிக்கப்பட்டது. இவ் விடயத்திற்காக தொழில் ரீதியாக  அனுபவம் உள்ள அலுவலகர்கள் அவ் வேளையில் மாகாண சபையில்  இல்லாது இருந்ததன் காரணமாக  இலங்கை    உள்நாட்டு இறைவரி சேவையின் உரிய கடமைகளில் ஈடுபட்டு இருந்த  30 அலுவலகர்கள் 1991.01.01 ஆந் திகதி தொடக்கம்  இணைக்கப்பட்டதன்  கீழ்  மாகாண இறைவரித் திணைக்களம்  ஆரம்பிக்கப்பட்டது,

 

இந்தத் திணைக்களத்தின் பிரதான காரியாலயம் ,கொழும்பு, மகரகம கம்பஹா, களுத்துறை, முத்திரைக் கட்டணப் பிரிவு என்பன வெவ்வேறாக நடாத்தப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட பணியாட்களில்,  இறைவரிச் சேவையின் அலுவலகர்கள் 174 பேரும் மற்றும் கணக்காளர் அத்துடன் இணைந்த சேவையின் அலுவலகர்கள் 51 பேரும் அடங்குகின்றனர்.  இதில் தற்போது  கடமையாற்றும் எண்ணிக்கை முறையே 160 உம் மற்றும் 48 உம் ஆகும்.

 

1991 தொடக்கம் இது வரை  ஒவ்வொரு வருடமும்  மாகாண சபையின்  நிதிக் கூற்றின் முழு வருமானத்தில் 82% அளவான வருமானத்திற்குரிய  வருமானப் பொறுப்பு அலுவலகராக  இறைவரி ஆணையாளர் செயற்படுகின்றார். ஆரம்பம் தொடக்கம் இது வரை  அந்த வருமான இலக்கினை  பூரணப்படுத்திக் கொடுப்பதற்கு  திணைக்களத்திற்கு இயலுமாக இருந்தது. இந்த வருமானத் தலைப்புக்களில் 2010 ஆம் ஆண்டு வரை  திணைக்களத்தின் பிரதான  வருமானம் புரள்வு வரி ஆகியதுடன் , அது திணைக்கள வருமானத்தில் 70%  ஆகும். அவ்வாறான நிலமையினுள் 2011 ஆம் ஆண்டில்  மத்திய அரசின்  வரவு செலவுத் திட்டத்தின் மூலம்  அந்த வரியை அவசரமான தீர்மானம் ஒன்றின்  கீழ்  இடை நிறுத்தியதன் காரணமாக  அலுவலகர்களின் தொழில் தொடர்பாக நிச்சயமற்ற  தன்மைக்கு திணைக்களத்திற்கு முகம்கொடுக்க ஏற்பட்டது . இந்த சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக திணைக்களத்தின்  அதற்கு அடுத்த  அதி கூடிய வருமானமாகிய  மாகாணத்தினுள்  நிலையான சொத்துக்களைக் கையளிக்கும் போது    செலுத்தவேண்டிய  முத்திரைக்  வரியினைச் கேகரிக்கும்  விடயத்திற்காக  முன்னுரிமை வழங்கி செயற்படுவது கட்டாய விடயம் ஒன்றாக மாறியது.  இங்கு  அதுவரை மிகவும் சொற்ப அளவாக நடைமுறைப்படுத்தப்பட்டு  இருந்த  1990 இன் 06  ஆம் இலக்க மேல் மாகாணத்தின்   நிதி நியதிச்சட்டத்தின் 62  பிரிவினை நடைமுறைக்கு உட்படுத்தி இலங்கையில்  முதலாவது முறையாக சொத்தினை கையளிக்கும் போது அந்த விற்பனைப் பெறுமதியினை மதிப்பிட்டு  முத்திரைக் கட்டணத்தினை அறவிடும் செயற்பாடு ஒன்றினை திணைக்களம்  அறிமுகப்படுத்தியது. .  அவ்வாறே  அந் நியதிச்சட்டத்தின் 57 ஆவது பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்க  குறைந்த பெறுமதிகள் குறிப்பிடப்பட்டு உள்ள உறுதிகளைப் பரிசோதிப்பது தொடர்பாக  கூடியளவு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

இது ஆரம்பத்தில் மிகப்பெரிய சவால் ஆகியபோதும் சொத்துக்களின் நிர்வாகம் மற்றும்  மதிப்பீடு தொடர்பாக  தகைமை உள்ள  அலுவலகர்கள்  திணைக்களத்தில்   இருந்த படியால்  எல்லா அலுவலகர்களுக்கும்  பயிற்சியினை வழங்கி  ஏற்றுக் கொள்ளப்பட்ட மதிப்பீடு செய்யும் முறையினை ஒழுங்கான  சட்டம் ஒன்றாக மாற்றுவதற்கு  திணைக்களத்திற்கு இயலுமாக இருந்தது.

 

இதன் பலாபலனாக 2010 ஆம் ஆண்டில் ரூபா 4548 மில்லியனான  முத்திரை கட்டண வருமானமானது 2015 ஆம் ஆண்டில் ரூபா 12176  மில்லியன் வரை  அதாவது 5 வருடங்களுள்  வருமானத்தினை 167% இனால் அதாவது  ரூபா 7628 இனால் அதிகரிப்பதற்கு இயலுமாக இருந்தது. மேலும் 2015 ஆம் ஆண்டில்  மாகாண சபையின் மிகக் கூடிய  வருமானம் ஒன்றினைப் பெற்ற  வருமானத் தலைப்பாக இடம்பெற இயலுமாக இருந்தது. அதன் ஊடாக  திணைக்களம்  தற்போது மீண்டும் மாகாண மக்களுக்கு அத்தியாவசிய சேவை ஒன்றினை வழங்கும்  திணைக்களம் ஒன்றாக  மாற்றுவதற்கு  இயலுமாக இருந்தது. அவ்வாறே  புரள்வு வரியினை  இரத்துச் செய்ததன் காரணமாக மாகாண சபைக்கு இல்லாமல் போன   வருமானத்தினை  வருடா வருடம் அதிகரித்துக் கொடுத்து மாகாண சபையினை மேம்படுத்த இயலுமாக இருந்தது.

 

அவ்வாறே மேல் மாகாணத்தினுள்  அமைந்துள்ள உள்ளூராட்சித் தாபனங்களின்  நிதிப் பலத்தை இந்த நடவடிக்கையினால்  அதிகரித்துக் கொடுப்பதற்கு திணைக்களத்திற்கு இயலுமாக இருந்தது. தற்போது  அத் தாபனங்களின்  முழு வருமானத்தில்  மிகவும் உயர்ந்த சதவீதம் ஒன்று முத்திரை கட்டண வருமானத்தின் மூலம்  வழங்கப்படுகின்றது. அவ்வாறே  திணைக்களத்தின் ஏனைய வருமான  தலைப்புகளான பரிசுப்போட்டி வரி   வருமானத்தினை  கடந்த பல வருடங்களாக அதிகரிக்க முடியுமாக இருந்ததுடன், காலால் அனுமதிப் பத்திர கட்டண வருமானம்,  நீதிமன்ற ஆவணங்களின் கீழ்  முத்திரைக் கட்டணம் மற்றும் முத்திரைக் கட்டணங்கள்    ,மத்திய அரசின் தேசத்தினைக் கட்டி எழுப்பும் வரி மற்றும் முத்திரைக் கட்டணம்   ஆகிய வருமானங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளும் கடந்த பல வருடங்களாக  ஒழுங்கு படுத்தப்பட்டன, இதற்கு மேலதிகமாக 2012 இன் 02 ஆம் இலக்க  கனிய வள நியதிச்சட்டம் மற்றும் 2015 ஆம் ஆண்டின்  01 ஆம்  இலக்க மேல் மாகாணத்தின் பொருட்களை அடகு பிடிப்பவர்களின் நியதிச் சட்டத்தினை  அமுல்படுத்தி நடைமுறைப்படுத்துவதுவதற்கு திணைக்களத்திற்கு இயலுமாக இருந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

clear formSubmit