கனிய வள வரி

 

கனிய வள வரி தொடர்பாக

 

1992 இன் 33 ஆம் இலக்க சுரங்கங்கள், மற்றும் கனிமங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க  வழங்கப்படும்  அனுமதிப் பத்திரத்தின் கீழ் மேல் மாகாணத்தினுள்  அமைந்துள்ள  காணி ஒன்றில்  கனிய வளங்களை அகழ்தல், அகற்றிக் கொள்ளும் உரிமைக்காக மேல் மாகாணத்தினுள் வியாபாரம் ஒன்றினை மேற்கொண்டு செல்லும்  ஒவ்வொரு வரும் கனிய வரியினைச் செலுத்த வேண்டும்.

 

வியாபாரம் என்பது  கனியப்பொருட்களை அகழ்தல். அகற்றிக் கொள்ளும் உரிமையினுள் பெற்றுக்கொள்ளும் கனியங்களை மொத்தமாக அல்லது சில்லறையாக  விற்பது என்ற கருத்தாகும்.

 

கனியவள வரி விகிதம்

 

1992 இன் 33 ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் ஏற்பாடுகள், மற்றும் கட்டளைகளுக்கு இணங்க வரி விகிதாசாரம்  புரள்வின் பெறுமதியில் (0.05)ஆகும்.

 

கனிய வள வரி மதிப்பீடு

 

மேல் மாகாணத்தில் கனிய வளங்களை அகழ்தல், அகற்றிக் கொண்டு செல்லும்  உரிமையின் ஊடாகப் பெற்றுக் கொள்ளும் புரள்வு வரியின் கீழ்  கனிய வள வரி செலுத்த வேண்டும்.

புரள்வு வரி என்பது பின்வரும்  கழிவு நடவடிக்கையின் பின் மேற்கொண்ட வியாபாரம் தொடர்பாக வரப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் கிடைத்த  அல்லது கிடைக்க வேண்டி உள்ள மொத்த நிதியின் அளவு என்ற கருத்தாகும்.

  • மூலதனச் சொத்துக்களை விற்பதனால் கிடைத்த நிதி.
  • முன்னைய தவணையில் புரள்வு வரியில் உள்ளடக்கப்பட்டு அதற்காக கனிய வள வரி செலுத்தப்பட்ட ஏதாவது நிதி ஒன்று உரிய தவணையில்  அறவிட முடியாத கடன் ஆக  மாறி இருந்தால்  அந்த நிதி
  • எவ்வாறான போதும் அறவிட முடியாத கடன் ஆக  முன்னர் அறவிடப்பட்ட நிதி ஒன்று ஏதாவது ஒரு  தவணை ஒன்றினுள்  கிடைக்கப் பெற்றால்  அந்த நிதி பொறுப்பேற்கப்பட்ட தவணைக்காக  வியாபாரம் புரள்வுவரிக்கு உள்ளடக்கப்பட வேண்டும்.

 

தரவிறக்கங்கள்

 

நியதிச்சட்டம் மற்றும் திருத்தங்கள்

circiularsstatuesgazzetsform_icon5

நியதிச்சட்டம் மற்றும் திருத்தங்கள் சுற்றறிக்கைகள் வர்த்தமானிப் பத்திரிகை விண்ணப்பப் படிவம்